×

விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்; இது ஒரு திரைக்காவியம்: ரஜினிகாந்த் பாராட்டு

சென்னை: விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம், இது ஒரு திரைக்காவியம், தமிழ்த் திரையுலகின் பெருமை வெற்றிமாறன், தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள் ரஜினிகாந்த்
என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச்31ம் தேதி விடுதலை படத்தின் முதல்பாகம் வெளியானது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் அற்புதமான படைப்புகள் வெளியானால் அதனை கண்டு ரசித்து படக்குழுவினரை நேரில் வரவழைத்தோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது வழக்கம். அதேபோல் விடுதலை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்; “விடுதலை, இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் பாராட்டியதற்கு சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி” என சூரி தெரிவித்துள்ளார்.

The post விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்; இது ஒரு திரைக்காவியம்: ரஜினிகாந்த் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : rajinikanth ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...